Wednesday, January 13, 2010

சிங்கையிலே பொங்க‌ல்.

சிங்கையிலே!
சிராங்கூன் வீதியிலே!
குட்டி இந்தியா
க‌டைத் தொகுதியிலே!
பொழுது புல‌ரும் வேளையிலே!
பொங்கி வ‌ரும்
பொங்க‌லே!


பொங்க‌ல் சீருகொண்டு வ‌ந்தோம்
பொங்க‌ சோறும் பொங்கிவ‌ந்தோம்
க‌ரும்புத்துண்டும் வெட்டி வ‌ந்தோம்
கூட‌ ஒரு
க‌விதையொன்றும் ப‌டைத்து வ‌ந்தேன்!


விவ‌சாயி ம‌க‌னாய் நான் பிற‌ந்தேன்
விவ‌சாய‌ம் செய்து வாழ்ந்தேன்
விவ‌சாய‌த்துக்கு விடைகொடுத்து
க‌ட்டுமான‌ம் க‌ற்ற‌றிந்தேன்
க‌ட்டுமான‌ தொழில் தேடி
சிங்கை வ‌ந்தேன்


உற‌வுக‌ளோ அங்கிருக்க‍ - என்
உழுத‌ நில‌மும் அங்கிருக்க‌
பெத்த‌வ‌ளின் பாச‌ம் என்னை
அங்கிழுக்க‌ ப‌ண‌ம்
என்னை இங்கிழுக்க‌
பாச‌மா ப‌ண‌மா
என்ற‌ போட்டியிலே ப‌ண‌ம் (த‌ற்காலிக‌ம்) ஜெயிக்க‌


மாட்டுக் கொம்பிலே சாய‌ம் த‌ட‌வி
மாலையிட்டு ம‌னிக‌ட்டி
கட்டிள‌ங்காளைக‌ளை
அவிழ்த்துவிட்டு
வீர‌ம் பொங்க‌ விர‌ட்டிவ‌ர‌
வீதியில்லை சிங்கையிலே
எங்க‌ளுக்கு வேறு வ‌ழியுமில்லை
சிங‌கையிலே


காலையின்றி பொங்க‌லா?
வீர‌மின்றி உழ‌வ‌ர் திருநாளா?
வினா வ‌ந்து போகுமுன்னே
சிங்கார‌ சிங்கையிலே
சின்ஞ்சிறு ப‌குதியிலே
சிங்கைத் த‌மிழ‌ரின்
ஏற்ப்பாட்டிலே


க‌ட்ட‌வ‌ண்டி ஒன்னு வ‌ச்சு
ப‌சுக்க‌ளை ப‌க்க‌த்தில் வ‌ச்சு
அம்மாவுக்கும் அடுத்த‌ப‌டியா
ஆடுக‌ளை அம‌ர்த்தி அழ‌கு பார்த்து


வீர‌மா காளிய‌ம்ம‌ன் கோவிலிலே
பொங்க‌லிட்டு - கேம்ப‌ல் வீதியிலே
ப‌டைய‌லிட்டு
இங்கே கூடியிருக்கும்
அன்ப‌ருக்கும் கொடுத்து
கொண்டாடுவோம்
பொங்க‌ல் திருநாளை


தொலைதூர‌ம் வ‌ந்துவிட்டோம்
நாட்டை விட்டு, வீட்டை விட்டு
தொலைதூர‌ம் வ‌ந்துவிட்டோம்
தொலைந்துபோய் நிற்கின்றோம் - ஆனாலும்
தொப்புள் கொடி உற‌வான‌தால்
உன்னை ம‌ற்க்க‌முடிய‌வில்லை
தாய்(ம‌ண்ணை) ம‌ற‌க்க‌முடிய‌வில்லை


என‌த‌ருமை தாய் ம‌ண்ணே - த‌மிழ் ம‌ண்ணே
செம்மொழி புக‌ழ் பெற்று
சிற‌ந்தோங்கி புக‌ழ்பாடும்
உன்பெய‌ரால் (த‌மிழ‌ரென்று) கூடியுள்ளோம்
பொங்க‌ல் வைத்துக் கொண்டாட‌!


பொங்க‌லோ பொங்க‌ல்.
பொங்க‌லோ பொங்க‌ல்.

ந‌ன்றி ந‌ன்றி ந‌ன்றி

அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்
த‌மிழ் வ‌ண‌க்க‌த்துட‌ன்

உங்க‌ள் ப‌ர‌வை அசோக்குமார்

Pongal Cards, Free Pongal eCards, Greeting Cards, Greetings from 123greetings.com

Pongal Cards, Free Pongal eCards, Greeting Cards, Greetings from 123greetings.com

Thursday, September 10, 2009

தமிழ் பாடல்

 கவிஞரும் பாட்டெழுதுவார் இப்படி.

ஒரு நதி, ஒரு பெளர்ணமி ஒரு ஓடம் என்னிடம் உண்டு....

ஒரு நதி ஒரு பெளர்ணமி ஒரு ஓடம் என்னிடம் உண்டு
ஓடக்காரன் ஓடக்காரன் அட உங்களில் யாருண்டு
ஒரு காடு சில மேடு சில பூக்கள் என்னிடம் உண்டு
பூக்காரன் பூக்காரன் அட உங்களில் யாருண்டு...

ஒரு புதையல் ஒரு குவியல் மலை வாசல் என்னிடம் உண்டு...
ஒரு புதையல் ஒரு குவியல் மலை வாசல் என்னிடம் உண்டு
அலிபாபா அலிபாபா அட உங்களில் யாருண்டு....

ஒரு நதி ஒரு பெளர்ணமி ஓர் ஓடம் என்னிடம் உண்டு
ஓடக்காரன் ஓடக்காரன் அட உங்களில் யாருண்டு.
ஒரு புதையல் சில குவியல் மலை வாசல்
என்னிடம் உண்டு அலிபாபா அலிபாபா
அட உங்களில் யாருண்டு......

ஓர் நதி ஓர் பெளர்ணமி ஓர் ஓடம்..........
ஒரு புதையல் ஓர் குவியல் மலைவாசல்………..
பாராமல் போன பெளர்ணமியெல்லாம் பரித்துக்கொடுக்கும் ஒருவன்

கேளாமல் போன பாடலையெல்லாம் திரட்டி கொடுக்கும் ஒருவன்,,,
பாராமல் போன பெளர்ணமியெல்லாம் பரித்துக்கொடுக்கும் ஒருவன்
கேளாமல் போன பாடலையெல்லாம் திரட்டிகொடுக்கும் ஒருவன்
நீயில்லை.. நீயில்லை

நான் மழையில் நனைந்த வானவில்லை என் மடியில் கட்டும் ஒருவன்,
என் மேகக்கதவு ஜன்னல் எல்லாம் திறந்துவைக்கும் ஒருவன்
நீயில்லை என் தேடல் அது வேறு போடா நீயில்லை....
ஓர் நதி ஓர் பொளர்ணமி ஓர் ஓடம் என்னிடம் உண்டு ஓடக்காரன் ஓடக்காரன் அட உங்களில் யாருண்டு

தீராமல் போன ஆசைகளெல்லாம் தீர்க்கதெரிந்த ஒருவன்
போகாத எல்லை போய்வந்தாலும் புன்னகை செய்யும் ஒருவன்

தீராமல் போன ஆசைகளெல்லாம் தீர்க்கதெரிந்த ஒருவன்
போகாத எல்லை போய் வந்தாலும் புன்னகை செய்யும் ஒருவன்
நீதானா.... நீதானா...

ஒரு கற்பு கன்னி தர்மமெல்லாம் கண்டு கொள்ளாத ஒருவன்
போதும் போதும் என்னும் வரையில் புதுமை செய்யும் ஒருவன்
நீதானா நீதானா....
நான் தேடும் சிங்காரன்! இங்கே யானோ ஏனில்லை

ஒரு நதி ஒரு பொளர்ணமி ஒரு ஓடம் என்னிடம் உண்டு
ஓடக்காரன் ஓடக்காரன் அட உங்களில் யாருண்டு...
ஒரு காடு சிறு மேடு சில பூக்கள் என்னிடம் உண்டு
பூக்காரன் பூக்காரன் அட உங்களில் யாருண்டு…
ஒரு புதையல் ஒரு குவியல் ஒரு வாசல் என்னிடம் உண்டு...
ஒரு புதையல் ஒரு குவியல் ஒரு வாசல் என்னிடம் உண்டு
அலிபாபா அலிபாபா அட உங்களில் யாருண்டு...
எங்களில் யாருண்டு....???
ஒரு நதி ஒரு பொளர்ணமி
ஒரு நதி ஒரு பொளர்ணமி....

நன்றி வணக்கம் பரவை அசோக்குமார்

திருமலை படப்பாடல்

அழகூரில் பூத்தவளே

அழகூரில் பூத்தவளே எனை அடியோடு சாய்த்தவளே மழையூரின் சாரலிலே என்னை மார்போடு சேர்த்தவளே
உன்னை அள்ளிதானே உயிர் நூலில் கோர்ப்பேன் உயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன்,
அழகூரில் பூத்தவளே எனை அடியோடு சாய்த்தவளே......
நீயுடுத்தி போட்ட உடை என் மனதை மேயுதடா
நீ சுருட்டி போட்ட முடி... மோதிரமா... ஆகுமடி

இமைபோல நீ சிருச்சு இதழலாலே நான் அணைக்க கூச்சமிங்கே கூச்சப்பட்டு போகிறதே...
நடையாலே நீ இழுக்க இடைமேலே நான் வழுக்க காச்சலுக்கும் கச்சல் வந்து வேகிறதே...
என்னைத்திரியாக்கி உன்னுள் விளக்கேற்றி எந்நாளும் காத்திருப்பேன்...

ஹோ... ஹோ... ஹோய்... அழகூரில் பூத்தவளே எண்ணை அடியோடு சாய்த்தவளே....
நீ முறிக்கும் சோம்பலிலே நான் ஒடிஞ்சி சாஞ்சிருவேன்...
நீ இழுக்கும் மூச்சுக்குள்ளே.... நான் இறங்கி தூங்கிருவேன்...
குறிலாக நான் இருக்க நெடிலாக நீ வளர்க்க சென்னை தமிழ் சங்கத்தமிழ் ஆனதடி....

அறியாமல் நானிருக்க அழகாக நீ பிறக்க காதல் மழை ஆயுள்வரை தூவுமடா...
என்னை மறந்தாலும் உன்னை மறவாதா நெஞ்சோடு நானிருப்பேன்...

ஹோ ஹோ ஹோய்.. அழகூரில் பூத்தவனே...
ம்ம்.... ஹோ.. என்னை அடியோடு சாய்த்தவளே..
ம்ம்ம்... மழையூரின் சாரலிலே..
என்னை மார்போடு சேர்த்தவளே
உனை அள்ளிதானே உயிர் நூலில் கோர்ப்பேன்
உயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன்....

நன்றி வணக்கம்
பரவை அசோக்குமார்